நைஜீரியாவின் லாகேஸ் பகுதியில் சர்வதே விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து அஸ்மான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புறப்படத் தயாராக இருந்தது.
ஓடுபாதையில் தயாராக இருந்த விமானம், கட்டுப்பாட்டு அறையிலிருந்து புறப்படுவதற்கான சமிக்ஞையை (சிக்னல்) எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது.
அப்போது திடீரென விமானத்தின் இடது பக்க இறக்கை மீது ஏறி நின்றபடி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விமானத்துக்குள் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த விமானப் பயணிகள் பீதியடைந்தனர். பயங்கரவாதியாக இருப்பனோ என்று நினைத்து கூச்சலிட ஆரம்பித்தனர்.
உடனடியாக இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவித்ததும் அவர் என்ஜினை அணைத்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்த காவல் துறையினர் விரைந்துவந்து அவரை கைது செய்தனர்.
ஆனால் அவர் யார் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. மேலும் அவர் ஏன் இப்படி செய்தார் என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது இந்தக் காணொலி இணையதளத்தில் வைரலாகிவருகிறது.