ETV Bharat / international

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் தொடர் அட்டூழியம்! - troops

திரிபோலி: லிபியாவில் ஐ.நா. ஆதரவுபெற்ற அரசின் தலைமையகத்தை ஹஃப்தார் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, இதனை மேலும் தீவிரப்படுத்த அந்த அமைப்பின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஹஃப்தார் கிளர்ச்சியாளர்களின் தொடர் அட்டுழியம்
author img

By

Published : May 7, 2019, 11:50 AM IST

தென்னாப்பிரிக்கா நாடுகளுள் ஒன்றான லிபியாவில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாஃபி பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடாஃபியின் இறப்புக்குப் பின், அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன், அந்நாட்டில் இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. இதற்கு எதிராக கலிபா ஹஃப்தார் என்னும் கிளர்ச்சியாளர்கள் படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றும் நோக்கத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்திவருகிறது. நேற்று (திங்கட்கிழமை) அரசு தலைமையகம் மீது ஹஃப்தார் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த அந்த அமைப்பின் தலைவர் கலிபா ஹஃப்தார், தனது படைக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், பொதுமக்களின் உயிர், அவர்களது உடைமைகள் ஆகியவற்றை மதித்துச் செயல்பட வேண்டும் என்றும், அரசுப்படையை முற்றிலும் அழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தத் தொடர் தாக்குதல் காரணமாக இதுவரை 432 பேர் கொல்லப்பட்டனர். இரண்டாயிரத்து 69 பேர் படுகாயமடைந்தனர். மேலும், கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைநகரிலிருந்து வெளியேறினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.