கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலைியல் ஆசியாவில் இதன் பாதிப்பு மிதமான நிலையில்தான் தற்போது உள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளை அதிகம் கொண்ட ஆப்ரிக்கா கண்டம் இந்த பெருந்தொற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல அமைப்புகள் கவலை கொண்டிருந்தன.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக கரோனா பாதிப்பானது ஆப்ரிக்காவில் குறைவாகவே காணப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலை எப்படி தடுப்பது என ஆப்ரிக்க நாடுகளிடம் வளர்ந்த நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டனியோ குட்ரரோஸ் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆப்ரிக்கா கண்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் பாதிப்பின் காரணமாக 3 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மறைமுகப்போரில் ஈடுபடும் எண்ணத்தை கைவிடுங்கள் - அமெரிக்கா மீது சீனா தாக்கு