மொசாம்பிக்கில் உள்ள டெட் மாகாணத்தில் சட்டவிரோதமாக கண்டெய்னர் லாரி ஒன்று வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், அவ்வழியே வந்த கண்டெய்னரை காவல் துறையினர் நிறுத்தி சொதனை செய்தனர். அப்போது, கண்டெய்னருக்குள் கொத்துக் கொத்தாக மனிதர்கள் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயர் அலுவலர் கூறுகையில், "மலாவியிலிருந்து சட்டவிரோதமாக மக்களை கண்டெய்னர் லாரி ஏற்றிவந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஏத்தியோப்பாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். கண்டெய்னரில் மொத்தம் 64 நபர்கள் உயிரிழந்து சடலமாகக் கிடந்தனர். 14 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் போலீஸ் ஆக்ஷன்; மதுபாட்டில்களுடன் தப்ப முயன்ற கார் பறிமுதல்!