ETV Bharat / international

காங்கோ நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 16, 2021, 10:36 PM IST

புடம்பே: காங்கோ நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

60 killed as boat capsizes in Congo river
காங்கோ நதி விபத்து

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் மை-டோம்பேயில், 700 பயணிகளுடன் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று (பிப்.15) நிகழ்ந்த இவ்விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சமூக விவகார அமைச்சர் ஸ்டீவ் எம்பிகாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ’அந்த படகில் 700 பேர் பயணித்துள்ளனர். லாங்கோலா ஏகோட்டி கிராமத்திற்கு அருகில் விபத்திற்குள்ளான அப்படகிலிருந்து 300 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 60 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதும் படகு கவிழ முக்கிய காரணம்’ என்றார்.

இதையும் படிங்க: '81 போகோ ஹரம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை' - நைஜீரியா ராணுவம் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.