தென்கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). யூ டியூப் பிரபலமான இவர் இரண்டு யூ டியூப் சேனல்களைத் தொடங்கி குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து ரிவ்யூ செய்துவருகிறார். மற்றொரு சேனலான ’போரம் டியூப் விலாக்கும்’ மிகவும் புகழ்பெற்றது. இந்த இரண்டு சேனல்களிலும் 31 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் போரமின் குடும்பத்தினர் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இந்திய மதிப்பில் ரூ.55கோடிக்கு ஐந்து மாடிகள் கொண்ட கட்டடத்தை விலைக்கு வாங்கி உள்ளனர்.
யூ டியூப் மூலம் இவ்வளவு வருமானமா என்று வாய் பிளக்கும் நபர்களுக்கு பதில் அளித்துள்ள யூ டியூப் நிபுணர்கள், போரமின் யூ டியூப் சேனல்களுக்கு மொத்தம் 31 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருப்பதால் அவருடைய சேனல் மாதத்துக்கு 3.1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21கோடி) சம்பாதிப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.