ETV Bharat / international

தென்ஆப்பிரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - ஐந்து பேர் உயிரிழப்பு!

ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ஒரு தேவாலயத்தில் ஆயுதமேந்திய கும்பலுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5-killed-in-hostage-situation-at-south-africa-church

author img

By

Published : Jul 12, 2020, 4:45 AM IST

தென்ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் புகழ்பெற்ற சர்வதேச பெந்தேகோஸ்தே புனித தேவாலயம் உள்ளது.

இது அந்நாட்டின் மிகவும் செல்வாக்கு நிறைந்த தேவாலயங்களில் ஒன்றாகும். இந்நிலையில் இங்கு ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத கும்பல், தேவாலயத்தில் இருந்த பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்ஆப்பிரிக்க காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர், நேற்று (ஜூலை11) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தென்ஆப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதுவரை தேவாலயத்திலிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் எத்தனை பேர் இதுவரை மீட்கப்பட்டார்கள் என்று அவர்கள் குறிப்பிடவில்லை.

மேலும் தேவாலயத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆயுதமேந்திய குழுவினரின் தாக்குதல் தேவாலய உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சண்டையால் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊழியர்களை டிக்டாக்கை நீக்கச் சொல்லும் அமேசான்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.