மேற்கு ஆப்பிரிக்கா நாடான பர்கினோ பாசோவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், டோல்ஃபி நகரில் தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், நான்கு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் நான்கு பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற நிலையில், தற்போது தொடர்ந்து நடைபெற்றுள்ள தாக்குதலால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 500 படைகளை மாலி, பர்கினோ பாசோ, நய்ஜர், சாட் அகிய நாடுகளுக்கு பிரான்ஸ் அரசு அனுப்பியுள்ளது.