ETV Bharat / headlines

கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை! - சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை

மும்பை: சிகரெட் திருடிய வழக்கில் கைதான ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், நீதிபதி, நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Theft
Theft
author img

By

Published : Apr 27, 2020, 3:32 PM IST

மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி ஊரடங்கால் பூட்டப்பட்டிருந்த கடையை உடைத்து சிகரெட் பாக்கெட்டுக்கள் திருடிய ஒருவரை காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் மேலும் பல குற்ற வழக்குகளில் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை கைது செய்த காவலர்கள் புறநகர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை காவலில் அனுப்பினார்.

காவலர்கள் அந்த நபரை, ’தானே’ மத்திய சிறைக்கு கொண்டுசென்றனர். ஆனால், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற காரணத்தால் அங்கு அவரை வைக்க சிறை நிர்வாக அலுவலர்கள் மறுத்தனர். இதனையடுத்து ராய்காட்டில் உள்ள தலோஜா சிறைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

இந்நிலையில் அந்த நபருக்கு தலோஜா சிறையில் கரோனா சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கரோனா தொற்று இருப்பதை அறிந்த காவலர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கடந்த மூன்று நாள்களாக அந்த நபருடன் பல இடங்களில் அவர்கள்தான் பயணம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து சுகாதாரத் துறை அலுவலர்களின் ஆலோசனைப்படி நீதிபதி, நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள் என 22 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு காவலர்கள் இரண்டு பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது காவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டிஎஸ்பி போல் நடித்து சிகரெட் பாக்கெட்டுகளை அபேஸ் செய்த திருடன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.