நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு அம்மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தனியார் கல்லூரியில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரமான உணவு, தூய்மையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க கரோனா பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் வார்டை விட்டு வெளியே வந்து அலட்சியமாக சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சுடு தண்ணீர் கூட கொடுப்பதில்லை; கரோனா பாதித்தவர்கள் சரமாரி குற்றச்சாட்டு