ETV Bharat / headlines

ஒரேநாளில் 115 பேர் கரோனாவால் உயிரிழப்பு! - Corona affect at Tamilnadu

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 115 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஒரேநாளில் 115 பேர் கரோனாவால் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 3, 2021, 9:21 PM IST

சென்னை: கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனைகளில் 22 பேரும், அரசு மருத்துவமனைகளில் 93 பேரும் என 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பரிசோதனை

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 619 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,011 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 24 லட்சத்து 76 ஆயிரத்து 704 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 35 ஆயிரத்து 881 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

குணமடைந்தவர்கள்

குணமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் நான்காயிரத்து 724 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 23 ஆயிரத்து 606 என அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனைகளில் 22 பேரும், அரசு மருத்துவமனைகளில் 93 பேரும் என 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 933 என அதிகரித்திருக்கிறது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 26 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 20 நபர்கள் இறந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.