ETV Bharat / entertainment

ஒரே ஆண்டில் 18 படங்கள்.. ஊமை விழிகள் மூலம் திரைப்படக் கல்லூரிக்கு உயிர்.. விஜயகாந்தின் மறுபக்கம்! - chennai news

நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்கின்ற விஜகாந்தை மக்களிடம் கொண்டு சேர்த்த திரைப்படங்களை பற்றியதே இந்த செய்தி தொகுப்பு.

விஜயகாந்த்
விஜயகாந்த்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 9:41 PM IST

சென்னை: விஜயராஜ் என்ற விஜயகாந்த், இனிக்கும் இனிமை படத்தின் மூலம் அறிமுகமாகி அகல் விளக்கு, சாமந்திப்பூ, தூரத்து இடி முழக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1981-இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படம்தான் விஜயகாந்தை மக்களிடம் முதல் முதலாக கொண்டு சேர்த்தது.

ரஜினி, கமலைத் தாண்டி மோகன், கார்த்தி, ராமராஜன், சத்யராஜ், பிரபு போன்றோரும் கொடிகட்டி பறந்த நேரம் அது. ஏராளமான வசூல் சக்கரவர்த்திகள் உலவிய அந்த 80-ஸ் காலகட்டத்தில் கருப்பு நிறத்தில் ஒருவர் நாயகனாக நடிக்க வருகிறார்.
பின்னாளில் பாமர மக்களின் கலைஞனாக அவதாரம் எடுத்,து விஸ்வரூபம் காட்டியவர் புரட்சிக்கலைஞர் என்று சினிமா பட்டம் பெற்றவர், விஜயகாந்த்.

சட்டம் ஒரு இருட்டறை படத்திற்குப் பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் அவருடைய படங்கள் வசூலை ஈட்டத் தொடங்கின. தான் நடித்து வந்த காலத்தில், தமிழ் சினிமாவில் யானையாகவே வலம் வந்தார். படம் எப்படியாவது குறிப்பிட்ட அளவில் வசூலித்துவிடும். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய மாட்டார்கள். சாட்சி போன்ற படங்களால், அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்படுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தியில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிக்க வந்த சில ஆண்டுகளில் கிராமப்புறத்து கதாநாயகனாக நடித்து வெற்றிகளைக் குவித்தவர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற படங்கள் எல்லாம் இந்த ரகம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து போலீஸ் அதிகாரியாக அவதாரமெடுத்த ஊமை விழிகள் படம், விஜயகாந்த்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு காவல்துறை அதிகாரி வேடம், புலனாய்வு, பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவது என பின்னியெடுத்தார். புலன்விசாரணை, ஆனஸ்ட்ராஜ், சேதுபதி ஐபிஎஸ், மாநகர காவல் என பட்டியல் நீண்டது.

கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்கள் வெளியாகி சாதனை படைத்தார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது. தன் திரை வாழ்வில் இதுவரை 50க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தி அழகுபார்த்தவர், விஜயகாந்த்.

சட்டம் ஒரு இருட்டறை படத்துக்குப் பிறகு வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு நானே ராஜா நானே மந்திரி, கரிமேடு கருவாயன், அம்மன் கோயில் கிழக்காலே போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து இவர் நடித்த ஊமை விழிகள் திரைப்படம் சரித்திரம் படைத்தது. யாருமே திரைப்பட கல்லூரி மாணவர்களை நம்பி படம் எடுக்க முன் வராத நிலையில், அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு வழங்கினார், விஜயகாந்த். படமும் மிகப்பெரிய புகழைப் பெற்றிருந்தது.

தனது மகன் விஜய்யை முன்னணி நாயகனாக்க போராடி வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்திடம் சென்று தனது மகனுக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்கச் சொல்கிறார். அவரும் மறுக்காமல் நடித்துக் கொடுத்த படம்தான், செந்தூரபாண்டி. மேலும், ஒரு புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு அளிக்கிறார், விஜயகாந்த். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அப்படம் வெளியாகிறது. அப்படம் புலன் விசாரணை, அதன் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

அதன்பிறகு, அதே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் கேப்டன் பிரபாகரன். எந்த நடிகருக்கும் அவர்களது 100வது படம் வெற்றி பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, அந்த அவப்பெயரை மாற்றியது.

1990-இல் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம், சத்ரியன். கே.சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் விஜயகாந்திற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது எனலாம். சின்னக் கவுண்டர் திரைப்படம் விஜயகாந்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற படம் என்றால், அது மிகையாகாது.

இப்போது வரையிலும் 'கண்ணுபடப்போகுதய்யா சின்ன கவுண்டரு' என்று பாடாத ஊரில்லை, ஆளில்லை எனலாம். பின்னர் கோயில் காளை, காவியத் தலைவன், ஏழை ஜாதி, சக்கரைதேவன், சேதுபதி ஐபிஎஸ், என் ஆசை மச்சான், பெரிய மருது, கருப்பு நிலா, திருமூர்த்தி என படங்கள் வந்தன.

1999-இல் சூர்யாவுக்கு உதவ பெரியண்ணா, கண்ணுபடப்போகுதய்யா போன்ற படங்கள் கமர்ஷியல் வெற்றியை கொடுத்தது. 2000த்தின் தொடக்கத்தில் வானத்தைப் போல, வல்லரசு என மெகா ஹிட் படங்களை கொடுத்தார். வானத்தைப் போல படம் அனைத்து சென்டர்களிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 2001-இல் வாஞ்சிநாதன், நரசிம்மா, தவசி என வெற்றிப் படங்களை கொடுத்தார்.

2002-இல் வெளியானது அந்த மிக முக்கியமான திரைப்படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா, விஜயகாந்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே முக்கியமான படமாக அமைந்தது. புள்ளி விவரங்கள் என்றாலே, விஜயகாந்த் தான் என மக்கள் பேச காரணமாக அமைந்த படம், ரமணா. அதில் வரும் மருத்துவமனை காட்சி இன்று வரையிலும் ரசிக்கப்படுகிறது.

பின்னர் சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா, பேரரசு என வெற்றி வாகை சூடினார். தனது திரைவாழ்வின் கடைசி காலத்தில் சுமாரான படங்கள் மட்டுமே வந்தது, அவருக்கு. 2010-இல் விருதகிரி என்ற படத்தை இயக்கி நடித்தார். மேலும், தனது மகன் சண்முகபாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் கடைசியாக நடித்தார். சண்முகபாண்டியன் நடித்த தமிழன் என்று சொல் படத்தில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் மிகப் பெரிய ஆளுமையாக வலம் வந்த கருப்பு சூரியன் இன்று (டிச.28) அஸ்தமனமானது.

இதையும் படிங்க: “அந்த ஒருமாத கால அவகாசம்தான்”.. கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் மூலம் சோனு சூட் அறிமுகமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.