சென்னை: தயாரிப்பாளர் போனி கபூர் தனது மனைவியான ஸ்ரீ தேவியின் இறப்பு சம்பந்தமாக முக்கிய கருத்துகளை சமீபத்தில் பங்கேற்ற பேட்டியில் தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது, ‘எனது மனைவி ஸ்ரீ தேவி உடல் மெலிவாக இருக்க கடுமையான டயட்டைக் கடைபிடித்தார்.
மருத்துவர்கள் அறிவுரைப்படி, உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பதை கடைபிடித்தார். இந்த விபரங்கள் அனைத்தும் திருமணத்திற்கு பிறகுதான் என் மனைவி டயட் கடைபிடிக்கிறார் மற்றும் காரம் இல்லாத உணவுகளையும் சாப்பிடுகிறார் என்பது எனக்கு தெரிய வந்தது.
மேலும், எனது மனைவிக்கு குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதால், அடிக்கடி மயங்கி கீழே விழுவதும் உண்டு. இதனால் மருத்துவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால், என் மனைவி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஸ்ரீ தேவியின் மரணம் இயற்கையானது அல்ல. எதிர்பாராத விதமாக நடந்த விபத்து. மனைவியின் மரணம் சம்பந்தமாக துபாய் போலீஸ் என்னிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்திய ஊடகங்களின் அழுத்தம் காரணமாக என்னை எல்லா வழிகளிலும் விசாரனை நடத்தினர். இறுதியில், ஸ்ரீ தேவியின் மரணத்தில் சதி இல்லை என்று போலீசார் கூறினர்” என போனி கபூர் பேட்டியில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், நடிகர் நாகர்ஜூனா, ஸ்ரீ தேவியின் மறைவிற்குப் பின் என்னைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் டயட் காரணமாக ஸ்ரீ தேவி கீழே விழுந்து பல் உடைந்ததாக கூறினார்’ என போனி கபூர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரு ராணுவ வீரர்கள் காயம்!