ETV Bharat / entertainment

4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை புறப்பட்ட ரஜினி.. நாளைக்கு 'ஜெயிலர்' வெளியீடு! - Himalayas after 4 years

ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலை புறப்பட்டார்.

ரஜினிகாந்த்
Rajinikanth
author img

By

Published : Aug 9, 2023, 11:10 AM IST

சென்னை: கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படி மலையாளம், கன்னட, ஹிந்தி என பல மொழி நடிகர்கள் நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்று உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகுகிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாகுகிறது. இப்படத்தின் டிக்கெட் புக்கிங் இம்மாத தொடக்க முதலே தொடங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் விற்று தீர்ந்தது. வெளிநாடுகளிலும் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் நிறைவடைந்து வருகிறது.

இதையும் படிங்க: ப்ரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் காலமானார்!

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை (ஆகஸ்ட் 09) இமயமலை புறப்பட்டுச் சென்றார். சென்னையில் விமான நிலையத்திலிருந்து பெங்களூரு விமான நிலையம் சென்று அங்கிருந்து இமயமலை பயணத்தை தொடர உள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்; ”4 ஆண்டுகள் கழித்து இமயமலை செல்கிறேன். நாளை ஜெயிலர் படம் வெளியாகிறது படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்” என கூறி புறப்பட்டார்.

கடந்த 2010ம் ஆண்டு வரை அவரது ஒவ்வோறு படம் வெளியாகும் போதும், அவர் இமயமலை செல்வது வழக்கம், இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு கரோனா தொற்று காரணமாகவும், அவரது உடல்நிலை சரி இல்லாத போன்ற பல்வேறு காரணங்களால் பயணங்களை தவிர்த்து, தற்போது கிட்டதட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இமயமலை புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தளபதி 68' லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.