இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து கடந்த 2019இல் வெளியான ’A1' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சாதனைகள் புரிந்தது. இதனையடுத்து இதே கூட்டணி இணைந்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படமும் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் யோகி பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். ஓலா கார் டிரைவராக நடிகர் யோகி பாபு நடிக்கும் இப்படத்திற்கு ‘மெடிக்கல் மிராக்கில்’ என அப்படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கவுள்ளார். மேலும், தங்கதுரை, சேஷு, மதுரை முத்து பாலா, என விஜய் டிவி நகைச்சுவை பட்டாலமே நடிக்கவுள்ளது.
இதை தவிர்த்து நடிகர் மன்சூர் அலிகான், நாஞ்சில் சம்பத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: Thalapathy 67: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் சமந்தா..?