ETV Bharat / entertainment

Oscars 2023: ஆஸ்கர் வென்று வரலாறு படைக்குமா RRR?... சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! - oscars 2023

ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 12, 2023, 2:27 PM IST

உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கா நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஆஸ்கர்ஸ் விருது வழங்கும் விழா ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்தாண்டு ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்து வெளியான ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருத்துக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது

இந்திய சினிமாத்துறையில் பானு அதையா 1983இல் வெளியான காந்தி திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைபாளருக்கான ஆஸ்கார் விருது வென்றார். அதன் பிறகு 1992இல் இந்திய இயக்குனர் சத்தியஜித் ரேவுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் குழுமம் கௌரவ விருது வழங்கி சிறப்பித்தது.

அதன் பிறகு 2009ஆம் ஆண்டு ’slumdog millionaire' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த பிண்ணனி இசைப் பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவில் ’ஜெய் ஹொ’ என்ற பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்காக வாக்களித்துள்ளார்.

மேலும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ஆஸ்கர்ஸ் விருது வழங்கும் விழாவில் இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும் அமெரிக்க நடிகை நடன இயக்குனருமான லாவ்ரன் காட்லியப் ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடுகிறார்

ஆஸ்கர் விருது இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய சினிமா சார்பாக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியான ‘செல்லோ ஷோ’ படம், சிறந்த ஆவணப் பட பிரிவில் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’, சிறந்த ஆவண குறுப்பட பிரிவில் ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆகியவை இடம் பெற்றது.

இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஆஸ்கர் விருத்துக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருத்துக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவிலும், சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ இடம்பெற்றது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் ’slumdog millionaire' படத்தில் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் பிரிவில் ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது என நான்கு பேர் ஆஸ்கர் விருது வென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடம் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற வேண்டும் என இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: ஆசிய திரைப்பட விருது 2023.. 'PS-1' 6 பிரிவுகளில் பரிந்துரை.. ஹாங்காங் விரைந்தது படக்குழு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.