ETV Bharat / entertainment

சுதந்திர தினத்திற்கு வெளியாகுமா ஜெயிலர்?… ரசிகருடன் மோதுகிறாரா ரஜினி! - jailer release date

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 25, 2023, 8:03 PM IST

இந்திய சினிமாவின் முகமாக பார்க்கப்படுபவர், நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக அண்ணாத்த என்ற படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வழக்கமான ரஜினி படமாக இருந்தாலும் எல்லாமே ஓவராக இருந்தது தான் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.

அதனைத்தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிடுகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிறப்புத்தோற்றத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். நெல்சன் கடைசியாக விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் நெல்சன் ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக கொடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

இதன் காரணமாக ஜெயிலர்‌ படத்தை பொறுமையாக செதுக்கி வருகிறார். இந்நிலையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர தினத்தை குறிவைத்து ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படமும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், மாவீரன். இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் அதே நேரத்தில் ரஜினி படமும் வெளியாக உள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படமாகும்.

பிரின்ஸ் படத்தின்‌ தோல்வியால் துவண்டுள்ள சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் திரைப்படம் பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயலான் படமும் இந்த ஆண்டு தீபாவளிக்குத் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவீரன் படத்தை சிவகார்த்திகேயன் மிகவும் நம்பியுள்ள நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது என்ற‌ தகவல் மாவீரன் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மாவீரன் படத் தரப்பு குழப்பத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Captain Miller: தென்காசியில் தனுஷின் படப்பிடிப்பு நிறுத்தம்; கலெக்டர் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.