ETV Bharat / entertainment

’நம் வரலாற்றை கொண்டாட வேண்டும்’ வைரலாகும் விக்ரம் வீடியோ

’பொன்னியின் செல்வன்’ பிரமோஷன் நிகழ்ச்சியில் தஞ்சை பெரிய கோயில் பற்றியும், சோழர்களின் ஆட்சி பற்றியும் நடிகர் விக்ரம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் விக்ரமின் வீடியோ
வைரலாகும் விக்ரமின் வீடியோ
author img

By

Published : Sep 26, 2022, 7:48 AM IST

மும்பையில் நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ பிரமோஷன் நிகழ்ச்சியில் நம் வரலாற்றை நாம் கொண்டாட வேண்டும் என விக்ரம் பேசிய வீடியோ தற்போது சமூக வலதளங்களில் வைராகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் பேசுகையில், ”இத்தாலியில் நேராக நிற்காமல் சாய்ந்திருக்கும் பீசா கோபுரத்தை கண்டு உற்சாகமடைந்து அதன் முன் நின்று செல்பி எடுத்துக்கொள்கிறோம். ஆனால், நம் நாட்டில் பல ஆண்டுகளாக சிமெண்ட் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட கோயில்கள் சாயாமல் நேராக நிற்கிறது.

வைரலாகும் விக்ரமின் வீடியோ

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கோபுரத்தை எந்த ஒரு இயந்திரத்தின் உதவியும் இல்லாமல் அந்த காலகட்டத்தில் ஆறு கிலோமீட்டருக்கு சாய்வுதளம் கட்டி கோபுரத்தின் உச்சிக்கு யானைகள், மனிதர்களின் உதவியால் இழுத்து செல்லப்பட்டு சிமெண்ட் இல்லாமல் உச்சியில் வைக்கப்பட்டது.

இந்த கோபுரம் தற்போது வரை ஆறு நிலநடுக்கங்களை கடந்தும் இத்தனை ஆண்டுகளாக எதுவும் ஆகாமல் நிலைத்து நிற்கிறது. சோழர்கால ஆட்சியில் மட்டும் 5,000 டேம்களை கட்டப்பட்டுள்ளது. அப்பொழுதே நீர் மேலாண்மை அமைச்சகம் , கிராமங்களில் தேர்தல் வைத்து தலைவர்கள் தேர்வு செய்யும் முறை, மக்களுக்கு கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் 9ஆம் நூற்றாண்டில் நடந்தது. அப்பொழுது அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவில்லை. இது வட இந்தியா, தென் இந்தியா என பார்க்க வேண்டியதில்லை நாம் இந்தியர்கள். நம் வரலாற்றை நாம் கொண்டாட வேண்டும்”, என பேசிய விக்ரம் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷின் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.