சென்னை: விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் "தளபதி 66" உருவாகிவருகிறது. இந்தத் திரைப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
இந்த நிலையில், இந்தப் படத்தைப் பற்றிய மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. அந்தத் தகவல் என்னவென்றால், விஜயின் புகழ்பெற்ற பாடல்களின் ஒன்றான ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலை இந்தப் படத்தில் ரீமிக்ஸ் செய்யவிருப்பதாக கூறப்படுவதுதான். முன்னதாக, இந்தப் படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான ’யூத்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஆல் தோட்ட பூபதி பாடல் மாபெரும் ஹிட் ஆனது. இந்த பாடலில் விஜய் - சிம்ரனின் அற்புத நடனம் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் தனி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இவர் ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு இசையமைத்த மணிசர்மாவின் சிஷ்யன் என்பது குறிப்பிடத்தக்கது.