ETV Bharat / entertainment

தனக்கே உரிய பாணியில் செல்ஃபி! இணையத்தை வட்டமடிக்கும் விஜயின் வீடியோ..! - chennai news

Vijay Selfie With Fans: GOAT படப்பிடிப்புத் தளத்தில் வேன் மீது ஏறி ரசிகர்களுடன், விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Vijay Selfie With His Fans
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 10:19 PM IST

Updated : Jan 10, 2024, 10:27 PM IST

Vijay Selfie With Fans

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி வருகிறது GOAT எனப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time). இந்த படம் ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தில், விஜய்யுடன் இணைந்து நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் மற்றும் நடிகைகள் சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, இவானா என பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக FIRST LOOK மற்றும் SECOND LOOK என வெளியான போஸ்டரிலும் விஜய்யின் புதிதான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது மட்டும் இன்றி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில், GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விஜய் நடிக்கும் காட்சிகளை, இயக்குநர் வெங்கட் பிரபு படமாக்கி வருகிறார். இந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் விஜய்யைப் பார்ப்பதற்காக இன்று (ஜன. 10) படப்பிடிப்புத் தளத்தில் அதிக அளவில் குவிந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ரசிகர்களைப் படப்பிடிப்புத் தளத்தின் உள்ளே இருந்தே பார்த்துக் கையசைத்தார் விஜய். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது ஏறி ரசிகர்களுடன் தனக்கே உரித்தான பாணியில் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சூழலில், இந்தப் படத்தை விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யப் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு முன்னதாக மிக விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் - ஒரு பார்வை..!

Last Updated : Jan 10, 2024, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.