ETV Bharat / entertainment

'அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும்போது, டிரிபிளா திருப்பிக்கொடுப்பேன்' - வெளியானது வாரிசு ட்ரெய்லர் - director vamshi

வம்ஷி இயக்கத்தில் விஜய் நடித்த "வாரிசு" படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 4, 2023, 5:14 PM IST

Updated : Jan 4, 2023, 5:19 PM IST

வம்ஷி இயக்கத்தில் விஜய்,ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள படம் "வாரிசு". இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த் மேகா, ஷ்யாம், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா கிரிஷ், சதீஷ், வி.டி.வி கணேஷ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எஸ். தமன் இசையும், கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பினையும் செய்துள்ளனர். இப்படத்தில் விஜய்யின் சகோதரர்களாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மேகாவும், தமிழ் நடிகர் ஷ்யாமும் நடித்துள்ளனர். முன்னதாக, இசையமைப்பாளர் எஸ்.தமனின் இசையில் விஜய் பாடிய 'ரஞ்சிதமே' பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

கில்லியில் இணைந்திருந்த விஜய்-பிரகாஷ் ராஜ் கூட்டணி மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த வரிசையில், இப்படத்திலும் 14ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் பிரகாஷ்ராஜூக்கு முக்கிய வில்லன் கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட்டில் அதிக சம்பளம் வங்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் உள்ள விஜய்க்கு இப்படத்திற்கு ரூ.100 லிருந்து ரூ.200 கோடி வரை சம்பளம் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக ஜெயசுதா நடிக்கிறார்.

விஜய்யின்
விஜய்யின் "வாரிசு" படத்தின் ட்ரெய்லர்

இப்படத்தில் வரும் தீப்பொறி பறக்க 'தீ" பாடலை பாடிய சிம்புவிற்கு விஜய் நன்றியும் கூறி இருந்தார். விஜய் மீது தனக்கு அலாதியான பிரியம் இருப்பதை பல சினிமா நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திய ராஷ்மிகா, முதல் முறையாக விஜய்யுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். இவர்களின் காம்போ நடிப்பில் உருவான "வாரிசு" படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அதில், 'அன்போ, அடியோ, எனக்கு கொடுக்கும்போது, டிரிபிளா திருப்பிக் கொடுப்பேன்' எனவும், 'எல்லா இடமும் நம்ம இடம் தான்' எனவும், 'ஆட்ட நாயகன்' எனவும் விஜய் பேசும் வசனங்களுக்கு, கமெண்ட்களில் அவரது ரசிகர்கள், அதனை சுட்டிக்காட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாளை வெளியாகிறது 'வாரிசு' ட்ரெய்லர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Last Updated : Jan 4, 2023, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.