ETV Bharat / entertainment

நாளை திரையரங்குகளுக்கு வரும் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்! - மெரி கிறிஸ்துமஸ்

Merry christmas movie: ஸ்ரீராம் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, கத்ரினா கைஃப் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மெரி கிறிஸ்துமஸ் படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நாளை(ஜன.12) வெளியாகிறது.

நாளை திரையரங்குகளுக்கு வரும் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 5:17 PM IST

சென்னை: பாலிவுட்டில் அந்தாதூன், பத்லாபூர், ஜானி கதார் போன்ற சிறப்பான படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம்வருபவர் ஸ்ரீராம் ராகவன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வெளியான உடனே, ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி, 'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகர் (Mumbaikar), ஃபார்ஸி இணையத் தொடர், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது மெரி கிறிஸ்துமஸ் படம் மூலம் கதைநாயகனாக மாறியுள்ளார். மேலும், பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை(ஜன.12) திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராஜேஷ், ராதிகா உள்ளிட்டோர் தமிழ் பதிப்பில் நடித்துள்ளனர். இப்படத்தில் சமீபத்தில் தமிழ் திரை பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தின் இறுதி அரைமணிநேரம் மிகவும் நன்றாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படம் நேற்று(ஜன.10) தமிழ் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்ட நிலையில் அவர்களும் படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஸ்ரீராம் ராகவனின் வித்தியாசமான மேக்கிங் மற்றும் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இருவரின் அட்டகாசமான நடிப்பு கவர்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து, படத்தில் சற்று மெதுவாக நகரும் திரைக்கதை மைனஸாக இருந்தாலும் கிளைமாக்ஸ் ஒரு ஃபீல்குட்(feel good) படத்தை பார்த்த நிறைவை தருகிறது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். பிரெஞ்சு நாவலின் பாதிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்ச்சைக்குரிய காட்சி விவகாரம்.. நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட அன்னபூரணி - ஜீ விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.