ETV Bharat / entertainment

மலேசியாவில் பிரம்மாண்டமாக தொடங்கிய விஜய் சேதுபதியின் புதிய படம்! - 7c entertainment

விஜய் சேதுபதி நடிப்பில் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கும் புதிய படத்தின் பூஜை மலேசியாவில் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 19, 2023, 5:14 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான வேடங்களிலும் நடிப்பவர். தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்து வெளியான படம் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதையும் படிங்க: 50 நாட்களைக் கடந்த விடுதலை பார்ட் 1 - படக்குழுவினர் உற்சாகம்!

இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார்.

அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்பராயன் அமைக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7C ஸ் என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதனிடையே இயக்குநர் பி. ஆறுமுக குமார், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது என்பதாலும், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தினை இயக்கிய இவர், இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் என்பதாலும் இதன் காரணமாக இப்படத்திற்கு தொடக்க நிலையிலேயே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய காலங்களில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. விடுதலை, விக்ரம் போன்ற படங்களில் தனி நாயகனாக இல்லாமல் கதைக்கு ஏற்ற வேடங்களில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடம் ரசிக்கப்பட்டது. மேலும் விஜய் சேதுபதி பிசாசு 2, ஜவான், மேரி கிறிஸ்துமஸ், உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" - மாமன்னன் அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.