சென்னை: தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம், வாரிசு. இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகிறது. இதுவரை இப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டமானது நடக்க உள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
அது குறித்தும் வாரிசு வெளியீட்டு சமயத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:பிரியா அட்லியின் வளைகாப்பு; நேரில் வாழ்த்திய 'தீ தளபதி' விஜய்!