ETV Bharat / entertainment

'ரஜினி, கமலுடன் நடிக்க ஆசை..!' - அருண் விஜய் - யானை டிரைலர்

அடுத்து வெளிவரவிருக்கும் தனது 'யானை' திரைப்படத்தின் புரொமோஷனிற்காக நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் சேலத்திலுள்ள ஒரு திரையரங்கிற்கு வந்தனர்.

’ரஜினி, கமலுடன் நடிக்க ஆசை..!’ - அருண் விஜய்

author img

By

Published : Jun 5, 2022, 9:32 PM IST

'யானை' திரைப்படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக நடிகர் அருண் விஜய் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார். திரையரங்கில் உள்ள ரசிகர்கள் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரிக்கு உற்சாக வரவேற்பு அளித்து ஆரவாரம் செய்தனர். பின்னர் ரசிகர்களுடன் அருண்விஜய் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது முதலில் அருண் விஜய் பேசியது, 'கரோனா பாதிப்புக்குப் பிறகு சினிமாத்துறை குறித்து பயத்தில் இருந்தோம். ஆனால், தற்போது நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பும், வசூலும் அதிகளவில் உள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப்படங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தீய விஷயங்களை ரசிகர்கள் விட்டுவிட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

மேலும், 'அஜித் படத்தில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது. அதேபோன்று வருங்காலங்களில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடனும் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தால் பெரும் பாக்கியமாக கருதுவேன்' என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ஹரி கூறும்போது, 'நான் எடுக்கும் திரைப்படங்கள் முதலில் தியேட்டரில் மட்டும்தான் வெளியிடுவேன். அதன் பின்னர் ஓடிடியில் வெளியிடட்டும்.

நான் எடுக்கும் திரைப்படத்தால் விநியோகஸ்தர்கள் முதல் திரையரங்கில் இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் போடும் கடைநிலை ஊழியர் வரை முதலில் பயன்பெறட்டும். அதன்பின்னர் மற்றவர்களுக்குப் பயன் கிடைக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அதற்காக நான் ஓடிடி தேவையில்லை என்று கூறவில்லை. ஒவ்வொன்றும் அடுத்தடுத்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் தான். முதலில் டிவியில் தொடங்கி தற்போது ஓடிடி வரை வந்துள்ளது. ஓடிடியையும் நான் வரவேற்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: AudioLeak: ’உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணனும்..!’ : பயில்வான் ரங்கநாதனிடம் சுசித்ரா பேசிய ஆடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.