ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் ’வீட்ல விஷேசம்’. இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று(ஜூன் 22) சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஆர்ஜே.பாலாஜி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ' ’எல்.கே.ஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகியப் படங்கள் நல்ல லாபகரமான படமாக அமைந்தது. வீட்ல விஷேசமும் எங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. இப்படத்தின் சாட்டிலைட், பிற மொழி டப்பிங், ஓடிடி உள்ளிட்டவைகள் நல்ல விலைக்குப் போனதால் மூக்குத்தி அம்மனை விட அதிக லாபம் கொடுத்த படமாக இப்படம் உள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள மதமாற்றம் தொடர்பான காட்சி, எனது வாழ்க்கையில் நடந்ததால்தான் வைத்தேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. கடந்த தலைமுறை இயக்குநர்களின் படங்களை இப்போது உள்ள ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் எடுப்பதே எனது முயற்சியாகப் பார்க்கிறேன்.
கடந்த ஜனவரியில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னேன். அது ஒரு மிடில்கிளாஸ் குடும்பத்தைப் பற்றிய படம். ஆனால், திரைக்கதை அமைக்க ஒரு ஆண்டுகள் ஆகும் என்று சொன்னேன்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: ''கேமரா ஆங்கிள்ல நம்ம ஆள யாரும் மிஞ்ச முடியாது..!'' - பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்