ETV Bharat / entertainment

'சபரி' படப்பிடிப்பில் இணைந்த வரலட்சுமி!

இதுவரை வரலட்சுமி நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தின் பெயர் சபரி. இப்படத்தை ஐந்து மொழிகளில் உருவாக்க படக்குழு திட்டம் தீட்டியுள்ளனர்.

author img

By

Published : Apr 4, 2022, 5:45 PM IST

சபரி படக்குழு மற்றும் வரலட்சுமி
சபரி படக்குழு மற்றும் வரலட்சுமி

சென்னை: மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து அனில்காட்ஸ் இயக்கி வரும் "சபரி" படத்தில் வரலட்சுமி சரத்குமார் இதுவரை கண்டிராத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை மகரிஷி கோண்ட்லா வழங்குகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், உகாதி தினத்தன்று வெகு சிறப்பாக தொடங்கப்பட்டு, தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். சுவாரசியமான இந்தப் போஸ்டர் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் கவர்ந்து ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, சபரி திரைப்படம் காதல் மற்றும் க்ரைம் கலந்த புதியதான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோபி சுந்தரின் இசை படத்திகு முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.

ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் கொடைக்கானலில் உள்ள சில அழகான இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குநராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

இதையும் படிங்க சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி”!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.