ETV Bharat / entertainment

அன்பு ரிட்டர்ன்ஸ்.. குறைந்த டிக்கெட் விலையில் தியேட்டரிகளில் ரீ-ரிலீஸாகியுள்ள வட சென்னை! - kollywood news

Vada Chennai: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சென்னை கமலா திரையரங்கில் வடசென்னை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது

வட சென்னை
வட சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 7:47 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ். தனது சினிமா வாழ்வில் ஆரம்ப காலகட்டத்தில் உடல் கேலிக்கு ஆளான தனுஷ், தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று தன்னை நிருபித்து காட்டினார். இவர் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

வட சென்னை
வட சென்னை

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் வட சென்னை. மேலும் இப்படத்தில் அமீர், ஐஷ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ராஜன் மற்றும் அன்பு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்த அமீர் மற்றும் தனுஷின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

வட சென்னை மக்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாக சொன்ன படங்களில் வட சென்னை படமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தின் வசனங்களும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் வட சென்னை வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னை கமலா திரையரங்கில் வட சென்னை படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இன்று முதல் நான்கு நாட்களுக்கு இப்படம் மாலை மற்றும் இரவு காட்சிகளாக திரையிடப்படுகிறது.‌ மூன்று காட்சிகளுக்கு மட்டுமே திட்டமிட்டிருந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை அடுத்து முப்பது காட்சிகளாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் டிக்கெட் விலை 49 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் வேட்டையாடு விளையாடு, சுப்ரமணியபுரம் ஆகியவை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படம்‌ தொடங்கும் முன் தனுஷ் நடித்துள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பப்பட உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக அமைந்துள்ளது. மேலும் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'லியோ' வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.