ETV Bharat / entertainment

விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன ஐ லியோனி! - அழகிய கண்ணே பட ட்ரெய்லர் ரிலீஸ்

நான் கேட்டதற்காக மறுக்காமல் 'அழகிய கண்ணே' படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி என ஐ.லியோனி தெரிவித்தார்.

Azhagiya Kanne
'அழகிய கண்ணே'
author img

By

Published : Jun 14, 2023, 1:39 PM IST

சென்னை: சினிமா தயாரிப்பு நிறுவனமான Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் சீனு ராமசாமியின் சகோதரர் அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு 'அழகிய கண்ணே'.

இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர் ஆர்.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் தங்களது அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினில் நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது, "என்னைப் பற்றி இப்போதும் நீங்கள் எழுதுகிறீர்கள். என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு என் நன்றிகள். கே எஸ் ரவிக்குமார் ரசிகை நான், நீங்கள் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் சிவா ஃபேமிலி எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படி தான் இருந்தது.

மேலும் லியோனி பழக மிக இனிமையானவர். எனக்கு மிக முக்கியமான பாத்திரம், ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப் பெண், என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படம் மூலம் அறிந்து கொள்வீர்கள். ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி" என்றார்.

இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசியது, "பள்ளி காலத்திலிருந்தே லியோனியின் ரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும். மேலும் இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது.

மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது. லியோனி யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

கதாநாயகன் லியோ சிவக்குமார் கூறியது, "இந்த மேடை எனக்குக் கனவு , சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு. அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்த, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன். சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது. எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே.எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி.

என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி. இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார். மேலும் இந்த படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்" நன்றி எனக் கூறினார்.

திண்டுக்கல் ஐ லியோனி பேசியது, "கே.எஸ் ரவிக்குமாரின் மிகப்பெரிய ரசிகன் நான். என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள். மேலும் விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார்.

படக்குழு அனைவருக்கும் நன்றி. என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான். பல முயற்சிகள் செய்தான், அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், படம் வெற்றி பெற என் மனதார வாழ்த்துக்கள், நன்றி எனக் கூறினார்.

'அழகிய கண்ணே' பட ட்ரெய்லர் ரிலீஸ்
'அழகிய கண்ணே' பட ட்ரெய்லர் ரிலீஸ்

இதையும் படிங்க: SJ Surya, Ajith Combo: மீண்டும் "வாலி" கூட்டணியா? எஸ்.ஜே.சூர்யா சொன்ன பாசிட்டிவ் பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.