ETV Bharat / entertainment

சினிமா சிதறல்கள்: எழுந்து வா இமயமே... பாரதிராஜாவுக்கு வைரமுத்து கவிதை! - சந்திரமுகி 2 போஸ்டர்

சந்திரமுகி - 2, தண்டகாரண்யம் திரைப்படம் உட்பட பல தமிழ் சினிமாக்களின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதுகுறித்த ஒரு தொகுப்பைக் காணலாம்.

today cinema update
சினிமா சிதறல்கள்
author img

By

Published : Aug 1, 2023, 12:31 PM IST

சென்னை: இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 65-வது படமாக தயாராகி வெளியாக விருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் மற்றும் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

சந்திரமுகி - 2 அப்டேட்
சந்திரமுகி - 2 அப்டேட்

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் படத்தின் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்துக்கான போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டது‌. இதில் வேட்டையன் ராஜா கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுந்து வா இமயமே! பாரதிராஜாவுக்கு வைரமுத்து கவிதை:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, 16 வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களின் மூலம் கிராமத்து கதைகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். 'இயக்குநர் இமயம்' என்று போற்றப்படும் அவர், தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

எழுந்து வா இமயமே! பாரதிராஜாவுக்கு வைரமுத்து கவிதை

இந்நிலையில் கடந்தாண்டு அவருக்கு வயது முதிர்வு காரணமாகவும், நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்புடன் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல் நிலை தேறிவிட்டதை முன்னிட்டு, கவிப்பேரரசு வைரமுத்து அவரை பாராட்டி வாழ்த்து கவிதை ஒன்றை பாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தண்டகாரண்யம் டப்பிங்:

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம்' படத்தின் டப்பிங் துவங்கியது. இதில் தினேஷ், கலையரசன், ஷபீர், ரித்விகா, வின்சு, பாலசரவணன், யுவன்மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட், ஒரிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

தண்டகாரண்யம் திரைப்பட டப்பிங் போட்டோ
தண்டகாரண்யம் திரைப்பட டப்பிங் போட்டோ

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இன்று முதல் டப்பிங் பணிகள் துவங்கியிருக்கிறது. முன்னதாக அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை:

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை குறித்து பேசினார்.

ரஜினிக்கு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

அந்த பேச்சு பல விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் ரஜினிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், ஜெயிலர் ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த், அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

அதுபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் திரையிட ஆவலாக உள்ளனர். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் ஜோடியாகும் அதிதி ஷங்கர்?:

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் 'விருமன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் எளிதில் இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக பல கிசுகிசுக்கள் பரவியது.

விஷ்ணு விஷால் ஜோடியாகும் அதிதி ஷங்கர்
விஷ்ணு விஷால் ஜோடியாகும் அதிதி ஷங்கர்

தற்போது அமலா பால் நடிக்க வேண்டிய படத்திலும் அதிதி கமிட்டாகவுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால் - இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் முதன்முறையாக உருவான 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. இதனையடுத்து இக்கூட்டணியில் வெளியான 'ராட்சசன்' ஹாரர் ப்ளஸ் சைக்கோ த்ரில்லரில் ரசிகர்களை மிரட்டியது.

இப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. அதில் விஷ்ணு விஷால் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிதி ஷங்கர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் பிஸியாவது மற்ற இளம் நடிகைகளுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது என நெட்டிஷன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Manipur violence: "மனித உரிமை அமைப்புகள் செயலிழந்து விட்டன" - கொந்தளித்த ஹென்றி டிபேன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.