ETV Bharat / entertainment

திருச்சிற்றம்பலம் மூவி அப்டேட்; தனுஷின் கேரக்டர் என்ன தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்து சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
author img

By

Published : Jun 12, 2022, 12:39 PM IST

சென்னை: தமிழில் 'துள்ளுவதோ இளமை' படத்தில் தொடங்கி ஹாலிவுட் வரை சென்றவர் நடிகர் தனுஷ். எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனது அசராத நடிப்பினால் ரசிகர்களைக் கவரக்கூடிய ஆற்றலைக் கொண்டவராக வலம் வருகிறார். இவருக்கு கிடைத்த தேசிய விருது நடிப்புலகில் இவருக்கு கிடைத்த அங்கீகாரம் எனலாம்.

இவரது நடிப்பில் உருவாகிய நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இதில் தனுஷின் 44ஆவது படமான திருச்சிற்றம்பலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ளது. இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில், இதன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சன் பிக்சர்ஸ் படத்தின் கேரக்டர்கள் அடங்கிய போஸ்டர்களை வெளியிட்டுவருகிறது.

அதன் படி, ரஞ்சனி கதாபாத்திரத்தில் பிரியா பாவனி சங்கரும், அனுஷா கதாபாத்திரத்தில் ராஷி கண்ணாவும், ஷோபனா கதாபாத்திரத்தில் நித்யா மேனனும், சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிராகஷ்ராஜூம் நடித்துள்ளதாக அப்டேட் வெளியாகின. இந்த நிலையில் தனுஷின் கதாபாத்திரம் என்னவென்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது வேறொன்றுமில்லை திருச்சிற்றம்பலம் தானாம். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை சுற்றுவட்டாரங்களில் படமாக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தனுஷின் திருச்சிற்றம்பலம் ரிலீஸ் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.