சென்னை: இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன. இந்நிலையில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'வாத்தி' திரைப்படத்தின் அதிரடி, அமர்க்களம் நிறைந்த டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார், நடிகர் தனுஷ். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சித்தாரா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் 'வாத்தி' திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் டீஸர் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 'வாத்தி' படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:இது எப்படி இருக்கு... ஜெய்பீம் இயக்குநருடன் இணையும் சூப்பர் ஸ்டார்?!