இயக்குநர் பான் நலின் இயக்கத்தில் உருவான குஜராத்திய திரைப்படமான ‘தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ படத்தில் ’மனு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த ராகுல் கோலி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து வாந்தி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறிப்பாக கடந்த அக்.2ஆம் தேதி, காலை சிற்றுண்டி உண்ணும்போது தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார், ராகுல். அதில் மூன்று முறை இரத்த வாந்தியும் எடுத்ததைக்கண்டு பதறிப்போன அவரது பெற்றோர் ராகுலை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவர் நடித்த ‘தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ திரைப்படம் ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ரசிகர்களிடமும், சினிமா விமர்சகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் வருகிற அக்.14ஆம் தேதி திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பே இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி சினிமா ரசிகர்களையும், சினிமா வட்டாரத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை 'தி லாஸ்ட் பிலிம் ஷோ' - ஒரு பார்வை