சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் கதை, திரைக்கதையில் வெளியான திரைப்படம், பாபா. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், அப்போது மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை (டிச.12) முன்னிட்டு, இன்று பாபா திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆனது.
அதிகாலை காட்சி முதற்கொண்டு திரையிடப்பட்ட இப்படத்தைக் காண, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பலரும் திரண்டனர். இதனால் பாபா வெள்ளிவிழா கண்ட திரைப்படம் போல காட்சி அளித்தது. மேலும் இப்படத்தில் ஒரு சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக படத்தில் இடம் பெற்றிருந்த ஏழு மந்திரங்களுக்கு பதில் ஐந்து மந்திரங்கள் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனையும் ரஜினியின் ரசிகர்கள் வரவேற்று, படத்தை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் மற்றொரு படம்!