ETV Bharat / entertainment

வெந்து தணிந்தது காடு படத்தின் மறக்குமா நெஞ்சம் பாடல் நாளை வெளியீடு

author img

By

Published : Aug 13, 2022, 1:10 PM IST

வெந்து தணிந்தது காடு படத்தின் மறக்குமா நெஞ்சம் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

வெந்து தணிந்தது காடு படத்தின் மறக்குமா நெஞ்சம் நாளை வெளியீடு

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் சிங்கிள் “மறக்குமா நெஞ்சம்” பாடல் நாளை (ஆகஸ்ட் 14) மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான “மறக்குமா நெஞ்சம்” பாடலின் ப்ரோமோ ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் அடுத்த மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் சிலம்பரசன் கூட்டணியில் வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய கெட்டப்பில் ரஞ்சித் படத்திற்கு ரெடியாகி வரும் சீயான் விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.