ETV Bharat / entertainment

சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற கங்கனா! - ராகவா லாரன்ஸ்

பி.வாசு இயக்கத்தில் தயாராகி வரும் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் இருந்து கங்கனா ரனாவத் கண்ணீருடன் விடைபெற்றார்.

Chandramukhi 2
சந்திரமுகி 2
author img

By

Published : Mar 16, 2023, 1:15 PM IST

Updated : Mar 16, 2023, 4:17 PM IST

சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற கங்கனா!

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி (chandramuki). இதில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். மலையாளத்தில் வெளியான மணிச்சித்ரதாழ் என்ற படத்தை பி.வாசு கன்னடத்தில் ரீமேக் செய்து இயக்கினார். அதே படத்தைத் தமிழில் ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகியாக உருவாக்கினார். இப்படம் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

அதே சமயம் இப்படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்பை அனைவரின் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டது. சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் 1 வருடம் திரையில் ஓடி சாதனை படைத்தது. தமிழில் ரஜினிகாந்த் நடித்ததால் அவருக்காகப் படத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. ரஜினிக்கு என மாஸ் காட்சிகள் டூயட் பாடல் என பக்கா ரஜினி படமாக இயக்கியிருந்தார் இயக்குநர் பி.வாசு. ஆகையால் இப்படம் பிரமாண்ட ஹிட் அடித்தது‌.

சந்திரமுகி படத்துடன் விஜய் நடித்த சச்சின், கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய இரு படங்கள் வெளியாகின. ஆனால் ரஜினியின் மாஸ் முன்பு மற்ற படங்கள் எடுபடாமல் போனது. இந்த நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பி.வாசு தற்போது எடுத்து வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றார்.

இப்படத்தை லைகா புரொடக்சன் தயாரித்து வருகிறது. படத்தில் சந்திரமுகியாக யார் நடிக்கிறார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியது. சமீபத்தில் அவரது பகுதிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பிலிருந்து விடைபெற்ற அவருக்குப் படக்குழுவினர் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் தனது பகுதி நிறைவடைந்தது குறித்து கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில்,"சந்திரமுகி 2 படத்திற்கான எனது பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. நான் நிறைய அற்புதமான மனிதர்களை சந்தித்து உள்ளேன். அவர்களிடம் இருந்து விடை பெறுவது கடினமாக உள்ளது என்றார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலும் காஸ்ட்யூமில் தான் இருப்போம், அதனால் ராகவா லாரன்ஸ் உடன் ஒருமுறை கூட புகைப்படம் எடுக்கவில்லை. அதனால் இன்று படப்பிடிப்பு தொடங்கும் முன் ராகவா லாரன்ஸிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

நடன கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வெற்றிகரமான இயக்குனராக நடன கலைஞராக நல்ல மனிதராக உள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி பெரிதும் பேசப்பட்டது. ரஜினி மற்றும் வடிவேலு காம்பினேஷன் அதிகளவில் ரசிக்க வைத்தது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஜோடி என்ன செய்திருப்பார்கள் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இதையும் படிங்க: Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்!

Last Updated : Mar 16, 2023, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.