ETV Bharat / entertainment

'அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாதபோது உதவிய முதலமைச்சர், உதயநிதி ஆகியோருக்கு நன்றி' - உருகிய நடிகர் சிம்பு - paper rocket

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேப்பர் ராக்கெட்' வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிம்பு உட்பட பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாத போது உதவிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு நன்றி

author img

By

Published : Jul 22, 2022, 10:02 AM IST

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ’பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், நடிகர் சிம்பு, உதயநிதி ஸ்டாலின், காளிதாஸ் ஜெயராம், விஜய் ஆண்டனி, பூர்ணிமா பாக்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன், சின்னி ஜெயந்த், காளி வெங்கட், இயக்குநர் பாலாஜி தரணிதரன், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய சின்னி ஜெயந்த், 'இது எனது முதல் வெப் சீரிஸ். நீச்சல் தெரியுமா எனக்கேட்டனர். தெரியாது என்றேன். எனது முழுக்காட்சியும் கடலில்தான் எடுத்தனர். காட்சி மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டது. இதுவொரு வித்தியாசமான வெப் சீரிஸாக இருக்கும்’ என்றார்.

மாரி செல்வராஜ் பேசுகையில், 'எனது இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு கிருத்திகா போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அவரது சினிமாவின் பார்வை பற்றி, அவருடன் பழகிய பின்புதான்‌ புரிந்தது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல அனுபவமாக இருந்து இருக்கும். ஒரு நடிகருக்கு வெப் சீரிஸ் நல்ல உதவியாக இருக்கும்' எனக் கூறினார்.

மிர்ச்சி சிவா பேசுகையில், உதயநிதி வந்துள்ளார். வந்துதானே ஆகணும். எல்லோரும் கிருத்திகாவுக்காக வந்துள்ளனர். அனைவரும் இயக்குனர் ஆக முடியாது. அதற்கு ஒரு ஆர்வம் வேண்டும். நாமும் வணக்கம் யூரோப் என்று படம் பண்ணுவோம் என்றார்

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், 'எனது அலுவலகத்தில் இருந்து தான் கிருத்திகாவின் இயக்குநர் பணி தொடங்கியது. ரொம்ப சின்சியரான பெண். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படங்களுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல முடியாது. இது பெரியவர்களுக்கான படம். இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பள்ளியில் திரைப்படங்கள் திரையிட முடிவெடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி’ என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 'இப்போது எல்லோரும் பான் இந்தியா படம் என்று ஆகி விட்டனர். நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றி விழாவில் தன்யா மற்றும் யாமினியுடன் பேசிகொண்டிருந்தபோது இருவரும் எங்கள் தாத்தா சினிமாவில் இருந்தனர் என்று சொன்னார்கள். நான் எங்கள் தாத்தாவும் சினிமாவில் தான் இருந்தார் என்று சொன்னேன்.

நான் எப்போது கதை கேட்டாலும் எனக்கு கிரைம் கதை இருக்கு என்று கிருத்திகா சொல்வார். அதனால் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். ஆனால், மாரி செல்வராஜிடம் மாட்டிக்கொண்டேன். கிருத்திகா தற்போது சற்று பதற்றமாக உள்ளார். சந்தானம் படம் குலுகுலு வருகிறது. அதை என்னை வெளியிடச்சொன்னார். உடனே கிருத்திகா என்னுடைய படம் வருகிறது என்று கோபித்துக்கொண்டார். சந்தானம் படம் திரையரங்கில் வெளியாகிறது. உன் படம் ஓடிடியில் வெளியாகிறது என்றேன். அதாவது திரையங்கு வரும் ரசிகர்கள்கூட இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று கிருத்திகா நினைக்கிறார்’ என கலாய்த்தார்.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசுகையில், 'சிம்பு உடன் படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை. அதற்கு இது தொடக்கமாக இருக்கும் என நினைக்கிறேன். கமல் சார் நிறைய புதியவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். உதய்க்கு நான் நன்றி சொல்லிகொள்கிறேன்' எனப்பேசினார்.

'அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாதபோது உதவிய முதலமைச்சர், உதயநிதி ஆகியோருக்கு நன்றி' - உருகிய நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு பேசுகையில், 'அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவரும் மிகவும் உதவியாக இருந்தனர். இருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்.ஜே.பாலாஜி ஒருமுறை சொன்னார். உதய் எப்போதும் யாருக்காவது உதவி செய்வார் என்று. அதேபோல உதய் எல்லாவற்றையும் ஃபாலோ செய்து கேட்கிறார். அதற்கும் நன்றி.

இன்று பெண்கள் என்று நாம் தனியாக பிரித்து பார்க்க முடியாது. அவர்களுக்கு நாம் இடம் கொடுக்கிறோமோ இல்லையோ அவர்களுக்கு இடம் உள்ளது. நம்மைச்சுற்றி நிறைய எதிர்மறை தான் கொண்டு வருகிறார்கள். பார்த்தாலே உங்களுக்கு தெரியும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என முடித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: 'பொதுமக்களின் வேண்டுதலால் திரும்பிவந்துள்ளேன்' - சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.