தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் என பன்முகத் திறமை படைத்தவர், டி.ராஜேந்தர். தனது திரைப்படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளவர். இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சென்று சிகிச்சைப் பெற்று திரும்பினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் பழைய டி.ராஜேந்தராக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இவர் தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி தனது பாணியில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிரம்ஸ் அடித்து பாட்டுப்பாடி அனைவருக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க:தாமதமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை... ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்!