ETV Bharat / entertainment

நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் திருமணமா? - உண்மை நிலவரம் என்ன? - silambarasan tr wedding

நடிகர் சிலம்பரசன் இலங்கை பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக இணையத்தில் பகிரப்படும் தகவலுக்கு அவரது தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Feb 25, 2023, 4:52 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் என அழைக்கப்படும் நடிகர் சிம்பு நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ’பத்து தல’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சை என்றான நிலையில் தற்போது இவரது திருமணம் குறித்த ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

40 வயதாகும் சிம்புவுக்கு அவரது தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார். கூடிய விரைவில் சிம்புவுக்கு திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்பது அவரது தாயாரான உஷாவின் விருப்பமும். சிம்புவை சுற்றி இருக்கும் காதல் தோல்வி கதைகள் நிறைய உண்டு. ஆனால் எல்லாவற்றையும் மறந்து எவ்வித வம்புகளுமின்றி சின்சியராக படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

ஆனாலும் அவரை சுற்றி திருமண சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இந்த நடிகையுடன் காதல், அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என எப்போதும் எதாவது செய்தியில் அவரது பெயர் வந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் சில யூடியூப் சேனல்களில் சிம்புவுக்கு பெண்பார்த்து விட்டதாகவும், இலங்கையை சேர்ந்த பெரிய தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு நிச்சயம் செய்துவிட்டதாகவும் கூறி தகவல் பரவி வருகிறது. இது சிம்பு ரசிகர்கள் இடையே ஆச்சரியம் கலந்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த செய்திக்கு சிம்பு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவரது மேலாளர் கூறியதாவது, "இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக சில மீடியாக்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. இதனை கடுமையாக மறுக்கிறோம். மீடியா நண்பர்கள் திருமணம் போன்ற விஷயங்களில் எங்களிடம் உறுதிபடுத்திவிட்டு செய்திகளை வெளியிடுங்கள். நல்ல செய்தி என்றால் முதலில் உங்களை அழைத்து உங்களிடம் தான்‌ பகிர்ந்துகொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏலே படத்தின் அழகியல் கிழித்தெறியப்பட்டுள்ளது - ஹலிதா ஷமீம் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.