ETV Bharat / entertainment

'சுழல்' படத்திற்கு வியக்க வைக்கும் வகையில் விளம்பரம்!

author img

By

Published : Jun 19, 2022, 5:56 PM IST

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிகளை படக்குழுவினர் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.

சுழல் படத்திற்கு வியக்க வைக்கும் வகையில் விளம்பரம்!

சென்னை:அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடர் குறித்த 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காட்சிகள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சூழலியல் பூங்காவில் அமைந்துள்ள நீர் நிலையில் திரையிடப்பட்டது. இதனை அங்குள்ள பார்வையாளர்கள் கண்டுகளித்து உற்சாகமாக கொண்டாடினர்.

இயக்குநர்கள் காயத்ரி & புஷ்கர் ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நடிகர்கள் கதிர், ஆர். பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் தயாரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத்தொடர், தற்போது தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல், பிரெஞ்சு (பெர்ஸியன்), ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முன்னுரையை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காட்சிகளை நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ஷெட்டி, நடிகர் கதிர், இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம், படைப்பாளிகள் புஷ்கர் & காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டனர். இதுவரை இத்தகைய 3டி வாட்டர் ஸ்கிரீன் புரொஜெக்சன் தொழில்நுட்பம் வேறு எந்த தொடருக்கும் மேற்கொள்ளாததால், இதனை இரவு நேரத்தில், ஏரியில் அமைதியாக இருந்த தண்ணீருக்குள் இத்தொடரின் காட்சிகள் திரையிடப்பட்டபோது, பார்வையாளர்கள் முற்றிலும் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர்

முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில்

இதையும் படிங்க:நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காததால் படம் எடுக்க தொடங்கினேன்- ஆர் ஜே பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.