நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 41’ திரைப்படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடந்துவந்தது. இந்நிலையில், இப்படப்பிடிப்பில் இயக்குநர் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இவ்விவகாரம் முற்றி, தற்போது இப்படமே கைவிடப்படப்போவதாக செய்திகள் வெளியாகி சூர்யா ரசிகர்களிடமும், பாலா ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சூர்யா ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “மீண்டும் செட்டுக்கு வர காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டு ’சூர்யா 41’ படப்பிடிப்பில் பாலாவுடன் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
அதில் ’சூர்யா41’ படத்திற்கான லுக்கில் இருக்கும் சூர்யா, மாஸான கிராமத்து இளைஞர் வேடத்தில் உள்ளார். ’பிதாமகன்’ போல் மிக அழுத்தமான கதையாக இது இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதிவின் மூலம் ’சூர்யா 41’ டிராப் செய்யப்பட்டுள்ளது எனப் பரவிய செய்திகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
-
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022
இதையும் படிங்க: ’கலைஞரிடம் என் படத்தின் கதையை சொன்னேன்..!’ - கமல்ஹாசன்