ETV Bharat / entertainment

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றி - ரஜினிக்கு லாபத்தில் பங்கு கொடுத்த கலாநிதி மாறன்!

kalanithi maran gave cheque to rajinikanth: ஜெயிலர் படம் வெளியாகி உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற நிலையில் கலாநிதி மாறன் ரஜினிகாந்தை சந்தித்து அவரை கொண்டாடும் வகையில் காசோலையை கொடுத்துள்ளார்

ஜெயிலர் பிரம்மாண்ட வெற்றி - ரஜினிக்கு லாபத்தில் பங்கு கொடுத்த கலாநிதி மாறன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 9:56 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ட்ரென்ட் செட்டராக அறியப்படுபவர். இவரது படங்கள் வெளியானால் அதுதான் அன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக இருக்கும். இவரது படங்களின் வெற்றியை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும். ஆனால் சமீப காலமாக அடுத்தடுத்து இவரது படங்கள் சரியாக போகாததால் இவர் மீது பல்வேறு வகையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இந்த‌ நிலையில் தான் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இது கோலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு முன் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதனால் ரஜினிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

ஆனாலும் நெல்சனே இப்படத்தை இயக்கட்டும் என ரஜினி சொல்லிவிட்டார். அப்படி உருவான படம் தான் ஜெயிலர். அனிருத் இசை அமைத்தார். மேலும்‌ இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம்‌ வெளியாகி தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: Jawan trailer: நா வில்லனா முன்னாடி வந்து நின்னா?.. மெர்சலுடன் வெளியான ஜவான் டிரைலர்!

திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்தது. இதனால் ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். விமர்சனம் செய்தவர்கள் எல்லோருக்கும் இந்த மெகா வெற்றி பதிலாக அமைந்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எல்லா இடங்களிலும் நம்பர் ஒன் வசூலை பெற்றது. வெளிநாடுகளிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.650 கோடியை கடந்துள்ளது ஜெயிலர் வசூல்.

அனிருத் பின்னணி இசை மற்றும் மோகன் லால், சிவராஜ் குமார் இருவரின் மாஸான சிறப்பு காட்சிகள் எல்லாமே படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற பொன்னியின் செல்வன் முதல் பாகம், கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் ஆகிய படங்களின் வசூலை சாதாரணமாக முறியடித்துள்ளது ஜெயிலர்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்தை இன்று (ஆக் 31) சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை ரஜினிக்கு வழங்கியுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ரஜினிகாந்திற்கு கொடுத்த காசோலை கவரில் 'தி ரியல் ரெகார்ட் மேக்கர்' (The Real Record Maker) என எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திரையரங்கை திருவிழாவாக மாற்றிய ரசிகர்கள்.. மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்த மங்காத்தா..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.