சென்னை: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை ‘Made in India’ என்ற பெயரில் பயோபிக் திரைப்படமாக வெளியாக இருப்பதை அறிவித்து உள்ளார். இந்திய சினிமாவின் தந்தையாக அறியப்படும் தாதா சாகேப் பால்கே, 1913இல் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற தனது முதல் படத்தை இயக்கினார்.
-
When I first heard the narration, it moved me emotionally like nothing else.
— rajamouli ss (@ssrajamouli) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Making a biopic is tough in itself, but conceiving one about the FATHER OF INDIAN CINEMA is even more challenging. Our boys are ready and up for it..:)
With immense pride,
Presenting MADE IN INDIA… pic.twitter.com/nsd0F7nHAJ
">When I first heard the narration, it moved me emotionally like nothing else.
— rajamouli ss (@ssrajamouli) September 19, 2023
Making a biopic is tough in itself, but conceiving one about the FATHER OF INDIAN CINEMA is even more challenging. Our boys are ready and up for it..:)
With immense pride,
Presenting MADE IN INDIA… pic.twitter.com/nsd0F7nHAJWhen I first heard the narration, it moved me emotionally like nothing else.
— rajamouli ss (@ssrajamouli) September 19, 2023
Making a biopic is tough in itself, but conceiving one about the FATHER OF INDIAN CINEMA is even more challenging. Our boys are ready and up for it..:)
With immense pride,
Presenting MADE IN INDIA… pic.twitter.com/nsd0F7nHAJ
மகாராஷ்டிராவில் பிறந்த இவரது இயற்பெயர், துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஆகும். தாதா சாகேப் பால்கே, திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை லண்டனில் படித்த பின், 1913இல் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற படத்தை இயக்கினார். தனது 19 வருட திரை வாழ்க்கையில், தாதா சாகேப் பால்கே 95 படங்களையும், 27 குறும்படங்களையும் இயக்கியுள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு சினிமாவில் சாதிப்பவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை, ’தாதா சாகேப் பால்கே’ பெயரில் வழங்கி வருகிறது.
இந்நிலையில், தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை ‘Made in India’ என்ற பெயரில் நிதின் கக்கர் இயக்குகிறார். நிதின் கக்கர் இதற்கு முன்னதாக ஃபிலிமிஸ்தான், மிட்ரான், ஜவானி ஜான்மேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய பிறகு ‘Made in India’ படத்தை விநியோகம் செய்கிறார்.
இது குறித்து தனது X பக்கத்தில் ராஜமௌலி வெளியிட்டுள்ள பதிவில் “நான் முதலில் ‘Made in India’ கதையை கேட்டபோது என்னை உணர்ச்சிப்பூர்வமாக ஈர்த்தது. வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது கடினமான ஒன்றாகும். அதுவும், இந்திய சினிமாவின் தந்தை குறித்து படமாக்குவது மேலும் சவாலான பணியாகும். ‘Made in India’ படத்தை விநியோகிப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்" என பதிவிட்டு, படத்தின் வெளியீட்டு டீசரை பகிர்ந்துள்ளார்.
‘Made in India’ படம், ராஜமௌலி மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிக்கும் முதல் படமாகும். அவரோடு இணைந்து வருண் குப்தாவும் தயாரிக்கவுள்ளார். ராஜமௌலி மகன் எஸ்.எஸ்.கார்த்திகே,யா ஆர்ஆர்ஆர் படத்தில் லைன் தயாரிப்பாளராக பணியாற்றினார்.
இந்த படம் குறித்து எஸ்.எஸ்.கார்த்திகேயா தனது X பக்கத்தில் ”நான் தயாரிப்பாளராக வேண்டும் என்ற பல வருட கனவு, இந்த படம் மூலம் நடந்துள்ளது” என கூறியுள்ளார். மேலும், ‘Made in India’ படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: 'என் உயிர் தோழன்' நடிகர் பாபு மறைவு! பாரதிராஜா இரங்கல்!