ETV Bharat / entertainment

இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலத்திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

author img

By

Published : Jun 27, 2022, 6:41 PM IST

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள 'A Beautiful Breakup' எனும் ஆங்கில திரைப்படத்தின் ’கம் ஃப்ரீ மீ’ பாடல் வெளியாகி உள்ளது.

இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலத்திரைப்படத்தின் பாடல் வெளியீடு

'A Beautiful Breakup' ஒரு ரொமான்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக்கலைஞர்களும், தொழில் நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான இசைஞானி இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட இளையராஜா இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும். இசைஞானி வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் கூட இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில் , “A Beautiful Breakup” திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாகப் பாராட்டி பேசியிருந்தார்.

இசைஞானியின் இசையை மேற்கத்திய பார்வையாளர்கள் கொண்டாடுகிறார்கள் எனவும், இசைஞானியின் , இந்தப் படத்தின் இசையை சாதாரணமாக விளம்பரப்படுத்தாமல், ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் போன்ற பிற பொருத்தமான, தகுதியான மன்றங்களில் போட்டிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலத்திரைப்படத்தின் பாடல் வெளியீடு

அதன்மூலம், 12ஆவது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் A Beautiful Breakup திரைப்படம் பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அம்மாவாக போகும் ஆலியா பட்- இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.