ETV Bharat / entertainment

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் மற்றொரு படம்!

author img

By

Published : Dec 8, 2022, 8:35 PM IST

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் மற்றொரு படம்

சென்னை: கடந்த 2007ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், விவேக், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம், சிவாஜி. ஏவிஎம் தயாரித்திருந்த இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ரஜினிகாந்த் திரைத்துறையில் நுழைந்து 47ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் இந்தாண்டு முப்பரிமாண முறையில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி, நாளை முதல் 15ஆம் தேதி வரை சிவாஜி படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. குறிப்பிட்ட மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் மட்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Relive the magic of #SivajiTheBoss on the silver screen! Re-releasing in Tamil & Hindi, in select @_PVRCinemas and @IndiaCinepolis Cinemas from 9-15th Dec to celebrate Superstar @rajinikanth birthday!@avmproductions @apinternationalfilms #AVMProductions #SuperstarRajinikanth pic.twitter.com/UWGknh17GY

— Aruna Guhan (@arunaguhan_) December 8, 2022 ">

மேலும் டிச.9ஆம் தேதி முதல் 'சிவாஜி தி பாஸ்' சென்னையில் உள்ள சத்யம், நேஷனல், சென்னை வி.ஆர். மால் ஆகிய திரையரங்குகளில் தினமும் ஒரு காட்சி போடப்படுகிறது. ஏற்கெனவே ரஜினியின் மற்றொரு படமான பாபா 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது சிவாஜி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜிகர்தண்டா 2: ஹீரோவாக ராகவா லாரன்ஸ்?

சென்னை: கடந்த 2007ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், விவேக், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம், சிவாஜி. ஏவிஎம் தயாரித்திருந்த இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ரஜினிகாந்த் திரைத்துறையில் நுழைந்து 47ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் இந்தாண்டு முப்பரிமாண முறையில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி, நாளை முதல் 15ஆம் தேதி வரை சிவாஜி படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. குறிப்பிட்ட மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் மட்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் டிச.9ஆம் தேதி முதல் 'சிவாஜி தி பாஸ்' சென்னையில் உள்ள சத்யம், நேஷனல், சென்னை வி.ஆர். மால் ஆகிய திரையரங்குகளில் தினமும் ஒரு காட்சி போடப்படுகிறது. ஏற்கெனவே ரஜினியின் மற்றொரு படமான பாபா 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது சிவாஜி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜிகர்தண்டா 2: ஹீரோவாக ராகவா லாரன்ஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.