ஜெய்சால்மர்: பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி, இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இன்று(பிப்.6) நடைபெற இருந்தது. ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மணமக்களின் குடும்பத்தினர் கடந்த 4ஆம் தேதியே ஜெய்சால்மர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இவர்களது திருமணத்திற்குப் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர்களது திருமணம் நாளை(பிப்.7) நடைபெறவுள்ளது. இன்று நலங்கு உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:பதான் படம் 11 நாட்களில் ரூ.780 கோடி வசூல் சாதனை.. மீண்ட பாலிவுட் திரையுலகம்..