ETV Bharat / entertainment

Jawan trailer: நா வில்லனா முன்னாடி வந்து நின்னா?.. மெர்சலுடன் வெளியான ஜவான் டிரைலர்! - Jawan Trailer

sharukh khan: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள 'ஜவான்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 1:37 PM IST

சென்னை: ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் 7-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள ஜவான் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின் படப்பிடிப்புக்கு அதிக கால அவகாசம் தேவைப்பட்டதால் செப்டம்பரில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கானை தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ இயக்குகிறார் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ஜவான் பட ப்ரொமொஷனில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. ஜூலை மாதம் படத்தின் பிரிவீயு வெளியான நிலையில் இந்த மாதம் ஜவான் படத்தின் இரண்டு பாடல்கள் ‘வந்த இடம்’ மற்றும் ‘ராமய்யா வஸ்தாவய்யா’ ஆகிய பாடல்கள் வெளியானது.

பின்னர் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஜவான் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பல பேர் ஒன்று கூடி ஷாருக்கானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் தான் இதுவரை இவ்வளவு பெரிய பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை எனவும், ரஜினி, விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது எனவும் ஷாருக்கான் நெகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர் பேசிய அட்லீ ஜவான் படம் உருவாவதற்கு நடிகர் விஜய் தான் முக்கிய காரணம் எனவும் நான் ஷாருக்கானை வைத்து படம் இயக்குவேன் என வாழ்நாளில் நினைத்து கூட பார்த்ததில்லை என உணர்ச்சி பொங்க பேசினார்.

இந்நிலையில் நேற்று ஷாருக்கான் தனது சமூக வலைதள பக்கத்தில் நாளை பூர்ஜ் கலிஃபாவில் ஜவான் திரைப்பட டிரைலர் வெளியாகும் என கூறி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இன்று டிரைலர் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாருக்கான், நயன்தாரா ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சந்தானத்தின் கிக் முதல் காதல் காவியம் குஷி வரை ரசிகர்களை ரசிக்க வைக்கும் இந்த வார மூவி ரிலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.