ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் அவரது முந்தைய படமான பதான் படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வருவாயை முறியடித்து ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம், உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில், 1055 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2023ஆம் ஆணில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற பட்டத்தைப் பெற்றது.
ஜவான் திரைப்படம் இந்தியாவில் 705 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 350 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. பதானின் வாழ்நாள் உலகளாவிய வருவாயான 1055 கோடி ரூபாயை ஜவான் படம் வெறும் 23 நாள்களிலே வசூல் செய்தது. இப்படம் 1968 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த தங்கல் படத்திற்கு அடுத்தபடியாக ஐந்தாவது அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என பட்டத்தை பெற்றுள்ளது. மேலும், இப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹிந்தித் திரைப்படமாக உள்ளது.
உள்நாட்டில், ஜவான் முதல் 23 நாள்களில் 587 கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக விளங்குகிறது.
ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக ஒரு கேரக்டர் கேமியோவிலும், மற்றொன்று நயன்தாராவுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், ரிதி டோக்ரா, சஞ்சீதா பட்டாச்சார்யா, கிரிஜா ஓக், லெஹர் கான் மற்றும் ஆலியா குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இதில் சாலேயா, ஜிந்தா பண்டா, ராமையா வஸ்தாவய்யா போன்ற பிரபலமான பாடல்களும், தலைப்பு தீம், ஃபராட்டா மற்றும் ஆராராரி ராரோ போன்ற பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வில் இருந்த ஷாருக்கான், இப்போது இந்தியத் திரையுலகில் ஒரே ஆண்டில் இரண்டு திரைப்படங்களில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார். இதேபோல் இயக்குநர் வரிசையில், அந்த சாதனையை எஸ்.எஸ்.ராஜமௌலி பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: மார்க் ஆண்டனி படத்தின் சென்சார் போர்டு ஊழல் விவகாரம்! நடிகர் விஷால் கொடுத்த அப்டேட்!