ETV Bharat / entertainment

ஆம்பல் போன்ற அழகிய முகம்.. மகளை அறிமுகம் செய்த பிரியங்கா சோப்ரா! - Malti Marie photos

நடிகை பிரியங்கா சோப்ரா தனது மகளின் முகத்தை முதன் முறையாக லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்து காட்டியுள்ளார்.

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காண்பித்த பிரியங்கா சோப்ரா.. கியூட் கிளிக்ஸ்!

author img

By

Published : Jan 31, 2023, 11:09 AM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ், இந்தி, பாலிவுட் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் முறையே கிறித்துவ மற்றும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பிரியங்கா சோப்ராவின் மகள் மால்டி மேரியின் கியூட் கிளிக்ஸ்

இதனையடுத்து டெல்லி மற்றும் மும்பை ஆகிய 2 இடங்களில், பிரியங்கா - நிக் தம்பதியின் திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2022, ஜனவரியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக பிரியங்கா சோப்ரா அறிவித்தார். இருப்பினும், குழந்தையின் முகத்தை கடந்த ஒரு வருடமாக வெளியில் காட்டாமலே இருந்தார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஹாலிவுட் விழா ஒன்றில், தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இதில் தனது குழந்தையான ‘மால்டி மேரி’யையும் உடன் வைத்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் முதன் முறையாக தனது குழந்தையை பிரியங்கா சோப்ரா உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: கேரளத்து சாரல் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியின் ஹாட்டான போதை க்ளிக்ஸ் இதோ!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.