மலையாளத்தில் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் வெளியான திரைப்பட்டம் ‘பாப்பன்’. நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு, ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘ஆண்டனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஜோஷி இயக்கி வெளியான “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் ஆகியோர்கள் தான் இந்த “ஆண்டனி” படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பாகும். இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜோஜு ஜார்ஜ், ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் தான் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்". கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மீண்டும், ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஜோடி எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியது. ‘இரட்டா’ படத்திற்குப் பிறகு ஜோஜு ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா மற்றும் பூஜை விழா கொச்சி கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று ( ஏப்.14 ) நடைபெற்றது. இந்த படத்தின் கதையை ராஜேஷ் வர்மா எழுத, ஒளிப்பதிவு ரணதிவே செய்கிறார். படத்தொகுப்பு ஷ்யாம் சசிதரன், இசை ஜேக்ஸ் பிஜோய், கலை இயக்கம் திலீப்நாத், ஆடை வடிவமைப்பு பிரவீன் வர்மா ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.
தொடர்ச்சியாக ஜோஸ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், தமிழ்த் திரையுலகில் இயக்குநர் ஜோஸுக்கும், நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளனது. இந்நிலையில், தற்போது அவர் இயக்கியுள்ள ‘ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகம்: இயக்குநர் யார்?